Wednesday, February 24, 2010

பணிபுரியும் பெண்கள் - Part 1

ணிபுரியும் பென்களைப் பற்றி பேசும் பொழுது என்னுடைய அம்மா, நான், மற்றும் எனது தங்கை மற்றும் எங்களது வாழ்க்கை அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.                

எனது அம்மா வேலைக்குச் செல்லும் வர்க்கம், ஆனால் எனது மாமி வீட்டில் இருந்து பணிபுரியும் பெண். எனக்கு மிகவும் comfortable ஆகத் தோன்றும். ஏன் எனது அம்மா வேலைக்குச் செல்ல வேண்டும், வீட்டிலிருந்து எங்களை பார்த்துக் கொள்ளலாமே என்று தோன்றும். ஆனால் எனது அம்மாவின் வேலை எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உதவியது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் எனது மனதில் அம்மா வீட்டில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றாத நாளில்லை என்றே சொல்லலாம்.                            

இன்று எனது நிலைமை அதுவே.  நான் வேலைக்குச் செல்வது எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக, ஆனால் எனது பெண் நினைப்பது என்னைப் போல.இதுவும் தொடருமோ !!!!!!!!!!!  தெரியவில்லை....