Tuesday, December 11, 2012

FOCUS ON YOUR DESTINATION....

I was jogging one day and i noticed a person in front of me, about 1/4 of mile. I could tell he was running a little slower than me and I thought, good, i shall try to catch him. I had about a mile to go my path before i needed to turn off.


So i started running faster and faster. Every block, i was gaining on him just a little bit. After just a few minutes i was only about 100 yards behind him, so i really picked up the pace and push myself. You would have thought i was running in the last leg of London Olympic competition. I was determined to catch him.


Finally, i did it! I caught and passed him by. On the inside i felt so good.
"I beat him" of course, he didn't even know we were racing.


After i passed him, i realized i had been so focused on competing against him that i had missed my turn. I had gone nearly six blocks past it. I had to turn around and go all back. Isn't that what happens in life when we focus on competing with co-workers, neighbors, friends, family, trying to outdo them or trying to prove that we are more successful or more important?


We spend our time and energy running after them and we miss out on our own paths to our God given destinies. The problem with unhealthy competition is that its a never ending cycle.


There will always be somebody ahead of you, someone with better job, nicer car, more money in the bank, more education, a prettier wife, a more handsome husband, better behaved children, etc. But realize that "You can be the best that you can be, you are not competing with no one." Some people are insecure because they pay too much attention 2 what others are doing, where others are going, wearing & driving.


Take what God has given you, the height, weight & personality. Dress well & wear it proudly! You'll be blessed by it.

Stay focused and live a healthy life.


There's no competition in DESTINY, run your own RACE and wish others WELL!!!

Tuesday, April 6, 2010

சம்பவத்தின் பிரதிபலிப்பு

கடுமையான தோள் பட்டை வலியால் அவதிப்படுவதால் சில நாட்களாக Physiotherapist சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று வழக்கத்தை விட தாமதமாக வேலையை விட்டு கிளம்பியதால் Physiotherapist செல்வதற்கும் தாமதமாகி விட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இரவு10.30. வீடு மிக அருகில் என்பதால் நடந்து தான் வந்து கொண்டிருந்தேன்.௦ 

வரும் வழியில் மிகவும் மோசமான நிகழ்வு. 

யாரோ தெருவில் செல்பவன் தவறாக நினைத்துக் கொண்டு பின் தொடர ஒரு பத்து நிமிடங்களில் தப்பிப்பது எப்படி என்று யோசித்து சரியான இடத்தில ஒதுங்கி நின்று, உடனே கணவருக்கு cell phone ல் அழைப்பு விடுத்து பின்னர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.


இரவில் ஒரு  பெண் தனியாக நடந்து வந்தால் இவ்வளவு தொல்லை இருக்கிறதா என்று யோசித்து பார்க்கிறேன். இல்லை நான் மதுரையில் பயின்று கொண்டிருக்கும் பொழுது எத்தனையோ முறை தாமதமாக வீடு திரும்பி இருக்கிறேன் ஆனால் இந்த மாதிரி ஒரு நிகழ்வு ஞாபகம் இல்லை. 


ஏன் இந்த அவலம்?????


சமூகம் இத்துனை சீர் கேடுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ!!!!!!!!!!



Thursday, March 4, 2010

பணிபுரியும் பெண்கள் - Part 2


அலுவல்களுடன் எழுதுவதில் பல சிரமங்கள் இருப்பினும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டிருக்கிறது, அதனால் தொடர்கிறேன்...

ஒவ்வொரு நாள் வேலைக்குச் செல்வதும் பிரம்ம பிரயத்னம் என்று சொல்லலாம். காலையில் எழும் பொழுதே ஐயோ இன்னும் சிறிது நேரம் தூங்கலாமே என்று தோன்றும். உள் மூளைச் சலைவை செய்து கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், சரியான நேரத்தில் அனைவரும் செல்ல வேண்டும் என்றால். இல்லையெனில் அனைவரும் தாமதமாக செல்லும் சிரமங்களை  தாங்கி கொள்ள வேண்டியிருக்கும்.

இவை அனைத்தையும் தாண்டி வேலைக்குச் செல்லும் இடத்தில உள்ள நெளிவு சுளிவுகளையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.  சில நேரங்களில் அனைத்து இடங்களிலும் சிரமங்கள் மட்டுமே தலை தூக்கி நிற்கும். மனம் தளராமல் எதிர்த்து நின்று  சாதித்து காட்டும் மனநிலை மேலோங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை கசப்பாகத் தோன்றும், வெறுப்பும் விஞ்சி இருக்கும்.

இவ்வளவு சிரமங்களைத் தாண்டி வேலைக்குச் செல்வதிலும் நிறைய சந்தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு பக்கம் எரிந்தாலும் மறுபக்கம் குளிர்ச்சியாய்........

Wednesday, February 24, 2010

பணிபுரியும் பெண்கள் - Part 1

ணிபுரியும் பென்களைப் பற்றி பேசும் பொழுது என்னுடைய அம்மா, நான், மற்றும் எனது தங்கை மற்றும் எங்களது வாழ்க்கை அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொள்ளலாம்.                

எனது அம்மா வேலைக்குச் செல்லும் வர்க்கம், ஆனால் எனது மாமி வீட்டில் இருந்து பணிபுரியும் பெண். எனக்கு மிகவும் comfortable ஆகத் தோன்றும். ஏன் எனது அம்மா வேலைக்குச் செல்ல வேண்டும், வீட்டிலிருந்து எங்களை பார்த்துக் கொள்ளலாமே என்று தோன்றும். ஆனால் எனது அம்மாவின் வேலை எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உதவியது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் எனது மனதில் அம்மா வீட்டில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றாத நாளில்லை என்றே சொல்லலாம்.                            

இன்று எனது நிலைமை அதுவே.  நான் வேலைக்குச் செல்வது எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக, ஆனால் எனது பெண் நினைப்பது என்னைப் போல.இதுவும் தொடருமோ !!!!!!!!!!!  தெரியவில்லை.... 




Tuesday, January 19, 2010

பணிபுரியும் பெண்கள்...

ஏதாவது எழுதனும்னு நெனச்ச உடனே தோனின விஷயம் இது.



பணிபுரியும் பெண்கள் என்றவுடன் நாம் அனைவரும் நினைப்பது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களை மட்டுமே....


ஆனால் உண்மை நிலை, அலுவலகத்தை விட வீட்டிலிருக்கும் பெண்களின் உழைப்பு கடினமானது. ஓய்வுக்கான நேரம் இல்லாதது...  அதிலும் கூட்டுக் குடும்பங்களின் இருக்கும் பெண்களின் நிலை மிகவும் கடினமானது. ஆனால்,  இவர்கள் அனைவரும் அத்துனை சுமைகளையும்  கடினமானதாக நினைத்துக் கொள்ளாமல் சுகமானதாக ஏற்றுக் கொள்வது தான் பலமே.



அதிலும் வேலைக்கு போய்க் கொண்டே கூட்டுக் குடும்பத்தில் இருப்பதில் பல நல்லதும் சில கெட்டதும் உண்டு. குழந்தைகளின் வளர்ப்பு சுலபமாக இருக்கும், ஆனால் கணவன் மனைவியின் தனிமை பாதிக்கப்படலாம். சில பல நேரங்களில்.

இவ்வளவும் இருந்தாலும் கூட்டுக்குடும்பத்தில் மகிழ்ச்சியின் அளவு அதிகம் என்பது என் கருத்து.




தொடரும்........

Monday, January 11, 2010

நட்பு



மந்திர வார்த்தை..... இனையும் அனைவருக்கும் வெற்றி... அனைவரும் நட்சத்திரங்களே..........


என்னோட நட்பை நினைத்து பார்க்கையில் மனதிற்குள் மழையடிக்கும்......




நட்பு என்றவுடன் என் நெருங்கிய தோழியின் ஞாபகம் மட்டுமே முதலில் என்னுள் எழும். என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் என்னைப் பற்றி முதலில் கூறுவது, நான் மிகவும் தைரியமானவள் என்பது தான். ஆனால் எனக்குள் இருக்கும் என்னை எனக்கு அறிமுக படுத்தியவள் அவள். இன்றும் நான் நினைத்து பார்ப்பது, "எத்தனை பேருக்கு இப்படி ஒரு நட்பு அமையும்" எண்பது தான். இன்று வரை அவள் என்னிடம் எதுவும் எதிர்பார்த்தது இல்லை, அவள் கொடுத்த அன்பை கூட....


என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் கூட்டமாய் இருந்த நாட்கள் அதிகம். ஆனால் இன்று தொடர்புகள் முற்றிலும் அறுந்து போனதாய் தோன்றுகிறது...



பொதுவாக கல்யாணம் ஆனதும் தொடர்புகள் அறுந்து போகும் ஆனால் என் விஷயத்தில் பள்ளி கல்லூரியில் இருந்து வெளியில் வந்தவுடன் காணாமல் போய்விட்டது.

இன்று நினைத்தாலும் வருத்தப்படுகிற ஒரு விஷயம்.

தினமும் orkut, facebook, மற்றும் இன்ன பிற வலைத் தளங்களில் தேடுகிறேன். சிலரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. முயற்ச்சியை கை விடாமல் தேடுகிறேன்.


உணர்ந்து சொல்கிறேன் நண்பர்களே நண்பர்களை எந்த காலத்திலும் தொலைத்து விடாதீர்கள்.

என்றாவது ஒரு நாள் நினைக்கையில் நெஞ்சில் முள்ளாய் தைத்து நிற்கும்.







Wednesday, January 6, 2010

மகிழ்ச்சியின் உச்சம்..........




இவள் எங்கள் வீட்டின் புதிய வரவு.  இவளது ஒவ்வொரு செய்கையும், சிரிப்பும், சேட்டையும் அதிசயம்.

ஒரு ஏழு மாசக் கொளந்த என்னல்லாம் சேட்ட பன்னுது பாருன்னு தோனும்.


அம்மான்னா எப்டி சேட்ட பன்னனும், அப்பான்னா எப்டி சேட்ட பன்னனும், அக்கா கிட்ட எப்டி சேட்ட பன்னனும், தாத்தா கிட்ட எப்டி வம்பிழுக்கனும் எப்டி மத்தவங்கள தன்னோட பேச வெக்கனும்னு எல்லாம் தெரியுது.

சரி, இது எல்லாம் முழிச்சுட்டு இருக்கும் போது, தூங்கும் போது கூட தன்னோட பக்கத்துல யாரு படுத்துகிட்டு இருக்கான்னு check பண்ணி பார்க்கறது....

என்ன ஒரு புத்திசாலிதனம்........ கடவுளின் படைப்ப என்னன்னு சொல்வது....

என்ன புதுசான்னு தோனுது இல்ல.... இவள் என்னோட ரெண்டாவது செல்ல மகள். பெரியவ சேட்ட பண்ணிணதையும் ரசிச்சுருக்கேன். என்னோட குட்டி தம்பிகளை கூட ரசிச்சுருக்கேன். ஆனாலும் இவள் எனக்கு புதுசா தெரியரா!!!!
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியோ!!!

எது எப்படியோ எங்கள் வீடு மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கிறது இவளது வரவால்.....

கடவுளுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி