Thursday, March 4, 2010

பணிபுரியும் பெண்கள் - Part 2


அலுவல்களுடன் எழுதுவதில் பல சிரமங்கள் இருப்பினும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டிருக்கிறது, அதனால் தொடர்கிறேன்...

ஒவ்வொரு நாள் வேலைக்குச் செல்வதும் பிரம்ம பிரயத்னம் என்று சொல்லலாம். காலையில் எழும் பொழுதே ஐயோ இன்னும் சிறிது நேரம் தூங்கலாமே என்று தோன்றும். உள் மூளைச் சலைவை செய்து கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், சரியான நேரத்தில் அனைவரும் செல்ல வேண்டும் என்றால். இல்லையெனில் அனைவரும் தாமதமாக செல்லும் சிரமங்களை  தாங்கி கொள்ள வேண்டியிருக்கும்.

இவை அனைத்தையும் தாண்டி வேலைக்குச் செல்லும் இடத்தில உள்ள நெளிவு சுளிவுகளையும் சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.  சில நேரங்களில் அனைத்து இடங்களிலும் சிரமங்கள் மட்டுமே தலை தூக்கி நிற்கும். மனம் தளராமல் எதிர்த்து நின்று  சாதித்து காட்டும் மனநிலை மேலோங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை கசப்பாகத் தோன்றும், வெறுப்பும் விஞ்சி இருக்கும்.

இவ்வளவு சிரமங்களைத் தாண்டி வேலைக்குச் செல்வதிலும் நிறைய சந்தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு பக்கம் எரிந்தாலும் மறுபக்கம் குளிர்ச்சியாய்........