Tuesday, April 6, 2010

சம்பவத்தின் பிரதிபலிப்பு

கடுமையான தோள் பட்டை வலியால் அவதிப்படுவதால் சில நாட்களாக Physiotherapist சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நேற்று வழக்கத்தை விட தாமதமாக வேலையை விட்டு கிளம்பியதால் Physiotherapist செல்வதற்கும் தாமதமாகி விட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இரவு10.30. வீடு மிக அருகில் என்பதால் நடந்து தான் வந்து கொண்டிருந்தேன்.௦ 

வரும் வழியில் மிகவும் மோசமான நிகழ்வு. 

யாரோ தெருவில் செல்பவன் தவறாக நினைத்துக் கொண்டு பின் தொடர ஒரு பத்து நிமிடங்களில் தப்பிப்பது எப்படி என்று யோசித்து சரியான இடத்தில ஒதுங்கி நின்று, உடனே கணவருக்கு cell phone ல் அழைப்பு விடுத்து பின்னர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.


இரவில் ஒரு  பெண் தனியாக நடந்து வந்தால் இவ்வளவு தொல்லை இருக்கிறதா என்று யோசித்து பார்க்கிறேன். இல்லை நான் மதுரையில் பயின்று கொண்டிருக்கும் பொழுது எத்தனையோ முறை தாமதமாக வீடு திரும்பி இருக்கிறேன் ஆனால் இந்த மாதிரி ஒரு நிகழ்வு ஞாபகம் இல்லை. 


ஏன் இந்த அவலம்?????


சமூகம் இத்துனை சீர் கேடுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ!!!!!!!!!!



1 comment:

  1. நிச்சயமா இது ரொம்ப நல்ல பதிவு நிறுத்திடாதிங்க கட்டாயம் தொடர்ந்து எழுதுங்க....உங்களின் மற்ற பதிவுகளையும் கண்டேன்...உங்களிடம் தெளிவான எழுத்து நடை உள்ளது...உங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

    Mubarak.I

    ReplyDelete