Monday, January 11, 2010

நட்பு



மந்திர வார்த்தை..... இனையும் அனைவருக்கும் வெற்றி... அனைவரும் நட்சத்திரங்களே..........


என்னோட நட்பை நினைத்து பார்க்கையில் மனதிற்குள் மழையடிக்கும்......




நட்பு என்றவுடன் என் நெருங்கிய தோழியின் ஞாபகம் மட்டுமே முதலில் என்னுள் எழும். என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் என்னைப் பற்றி முதலில் கூறுவது, நான் மிகவும் தைரியமானவள் என்பது தான். ஆனால் எனக்குள் இருக்கும் என்னை எனக்கு அறிமுக படுத்தியவள் அவள். இன்றும் நான் நினைத்து பார்ப்பது, "எத்தனை பேருக்கு இப்படி ஒரு நட்பு அமையும்" எண்பது தான். இன்று வரை அவள் என்னிடம் எதுவும் எதிர்பார்த்தது இல்லை, அவள் கொடுத்த அன்பை கூட....


என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் கூட்டமாய் இருந்த நாட்கள் அதிகம். ஆனால் இன்று தொடர்புகள் முற்றிலும் அறுந்து போனதாய் தோன்றுகிறது...



பொதுவாக கல்யாணம் ஆனதும் தொடர்புகள் அறுந்து போகும் ஆனால் என் விஷயத்தில் பள்ளி கல்லூரியில் இருந்து வெளியில் வந்தவுடன் காணாமல் போய்விட்டது.

இன்று நினைத்தாலும் வருத்தப்படுகிற ஒரு விஷயம்.

தினமும் orkut, facebook, மற்றும் இன்ன பிற வலைத் தளங்களில் தேடுகிறேன். சிலரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. முயற்ச்சியை கை விடாமல் தேடுகிறேன்.


உணர்ந்து சொல்கிறேன் நண்பர்களே நண்பர்களை எந்த காலத்திலும் தொலைத்து விடாதீர்கள்.

என்றாவது ஒரு நாள் நினைக்கையில் நெஞ்சில் முள்ளாய் தைத்து நிற்கும்.







8 comments:

  1. அருமையான பதிவு. எல்லோருமே ஏதோ ஒரு வகையில் நட்புகளை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கு திரும்ப கிடைக்க வாழ்த்துக்கள்.:)

    ReplyDelete
  2. நட்பை அழகாக கூறி இருக்கறீர்கள்...

    என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. I wish u get those friends this year....

    ReplyDelete
  4. நண்பர் பாலாவிற்கு என்னுடைய நட்பு திரும்ப கிடைத்துக்கொண்டிருக்கிறது

    ReplyDelete